கோவை;ஐ.பி.சி., சட்டப்பிரிவிலிருந்து பழைய எண்கள் மாற்றப்பட்டு, ஐ.என்.எஸ்., க்கு புதிய சட்டப்பிரிவு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மாற்றி, புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்திய தண்டனை சட்டம்(ஐ.பி.சி.,) குற்றவியல் நடைமுறை சட்டம் ( சி.ஆர்.பி.சி.,) இந்திய சாட்சிய சட்டம் (ஐ.இ.ஏ.,) ஆகிய சட்டங்கள் முறையே பி.என்.எஸ்., பி.என்.எஸ்.எஸ்., பி.எஸ்.ஏ., என்றும், அதற்கான சட்டப்பிரிவுகளின் எண்களும் மாற்றப்பட்டுள்ளன. 511 சட்டப்பிரிவுகளை உள்ளடக்கிய இந்திய தண்டனை சட்டம், 356 சட்டப்பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. 175 சட்டப்பிரிவு மாற்றப்பட்டுள்ளது. 8 சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டும், 22 பிரிவு ரத்து செய்தும் புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போல, 484 சட்டப்பிரிவு உள்ளடங்கிய குற்றவியல் நடைமுறை சட்டம், 533 சட்டப்பிரிவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 160 சட்டப்பிரிவு மாற்றப்பட்டு, 8 புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 22 பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 167 சட்டப்பிரிவு உள்ளடக்கிய இந்திய சாட்சிய சட்டம் திருத்தப்பட்டு, 23 பிரிவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு, 5 பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்திலுள்ள முக்கிய பிரிவுகளின் ( ஐ.பி.சி., செக்ஷன் ) பழைய எண்கள் மற்றும் மாற்றப்பட்ட ஐ.என்.எஸ்., புதிய பிரிவுகளின் முக்கிய எண்கள் விவரம் வருமாறு: ---------------------------------ஐ.பி.சி., - பி.என்.எஸ்., - குற்றம்----------------------------------302 -103 - கொலை செய்தல்304(ஏ) - 106 - கவனக்குறைவால் மரணம் விளைவித்தல்304(பி) - 80 - வரதட்சணை கொடுமையால் பெண் மரணம் 306 - 108 - தற்கொலைக்கு தூண்டுதல்307- 109- கொலை முயற்சி309 - 226 - தற்கொலை முயற்சி286 - 287 - வெடிபொருட்கள் பயன்படுத்தல்294 - 296 - ஆபாச செயல்கள்509 - 79 - பெண் மானபங்க முயற்சி323 - 115 - திட்டமிட்டு காயம் ஏற்படுத்துதல்34 - 3(5) - குழுவாக சேர்ந்து குற்றம் செய்தல்149 - 190 - சட்டவிரோத கூடி செய்த குற்றம்324 - 118(1) - ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல்325 - 118(2) - பலத்த காயம் ஏற்படுத்துதல்326 - 118(3) - ஆயுதத்தால் பலத்த காயம் ஏற்படுத்துதல்353 - 121 - அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்336 - 125 - தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துதல்337 - 125- ஆபத்துக்கு உள்ளாக்கி காயம் ஏற்படுத்துதல்338 - 125- ஆபத்துக்கு உள்ளாக்கி பலத்த காயம் ஏற்படுத்துதல்341 - 126 - தவறாக தடுத்து நிறுத்துதல்353 - 132 - பொது பணியாளருடன் வன்முறையில் ஈடுபடுதல் 354( ஏ) - 75 - பாலியல் தொந்தரவு354(பி)- 76 - பெண் உடையை களைய முயற்சி354(டி)- 78 - தொடர்ந்து தொந்தரவு செய்தல்363 - 139 - கடத்தல்376 - 64 - பாலியல் பலாத்காரம்284 - 286 - வெடிபொருட்ளை கவனகுறைவாக கையாள்தல்290 - 292 - பொது இடத்தில் தகராறு செய்தல்447 - 329(3) - குற்றம் செய்ய ஊடுருவல்448 - 329(4) - அத்துமீறி வீட்டிற்குள்நுழைதல்411 - 317 - திருட்டு பொருட்களை மறைத்தல்420 - 318 - ஏமாற்றுதல் 382 - 304 - திருட்டு445 - 330- வீடு உடைத்தல்447 - 330- குற்றம் புரிய நுழைதல் 494 - 82- மனைவி இருக்கும் போது 2 வது திருமணம் செய்தல் 498(ஏ)- 85 - வரதட்சணை கொடுமை செய்தல்----------------------------------------------------------போலீஸ் ஸ்டேஷன்களில், பி.என்.எஸ்., சட்டப்பிரிவில் புதிதாக போடப்படும் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்., ) இனிமேல் மாற்றப்பட்ட எண்கள் குறிப்பிடப்படும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது, புதிய எண்களை குறிப்பிட்டு தான் வக்கீல் வாதிட வேண்டும். எடுத்து காட்டாக, கொலை வழக்கில், ஐ.பி.சி., 302 என்று வாதிட்ட வக்கீல்கள், இனிமேல் ஐ.என்.எஸ்., 103 என்று வாதிட வேண்டும். ..........