ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில் விதை வழங்கல்
ஆனைமலை; ஆனைமலையில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் சார்பில் விதைகள் வழங்கப்படுகிறது. ஆனைமலை வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை: தமிழக முதல்வரால் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் கடந்த, 4ம் தேதி துவங்கப்பட்டது. மாநிலத்தின் அனைத்து வட்டாரங்களிலும் துவக்கப்பட்டு, நகரங்களில் வாழ்வோர் வீட்டு தோட்டம் பராமரிக்கும் பொதுமக்கள் (விவசாயிகள் உள்பட) பயனடையும் வகையில், விதைகள் வழங்கப்படுகிறது. மரத்துவரை, தட்டை, அவரை விதைகள் தொகுப்பு, ஆனைமலை வட்டாரத்தில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் பயனாளிகள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல் காண்பித்து இலவசமாக பெற்று வீட்டு தோட்டம், தொட்டிகளிலும் வளர்த்து இயற்கை விவசாயத்தில் பங்கேற்கலாம். விதைகள் வட்டார வேளாண்மை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.