உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுார், கருமத்தம்பட்டியில் குட்கா பொருட்கள் பறிமுதல்

சூலுார், கருமத்தம்பட்டியில் குட்கா பொருட்கள் பறிமுதல்

சூலுார்;சூலுார் மற்றும் கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை பகுதியில் போலீசார், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்போரை பிடிக்க தீவிர ரோந்து சென்றனர். அதில், கண்ணம்பாளையம், தென்னம்பாளையம், பட்டணம், மேட்டு லட்சுமி நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்டி கடைகளில் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, விஸ்வநாதன், சதீஷ்குமார், கந்தசாமி, சாந்தா மணி உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களுக்கு புகையிலை பொருட்களை சப்ளை செய்வோர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ