| ADDED : நவ 27, 2025 05:01 AM
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சஷ்டி நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன்பின், காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முரு கப்பெருமான், தேவியடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிேஷக, அலங் கார பூஜைகள் நடந்தன.