உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன்கடை ஊழியர்கள் கரும்பு விற்க வேண்டுமா?

ரேஷன்கடை ஊழியர்கள் கரும்பு விற்க வேண்டுமா?

கோவை, : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள 11.5 லட்சம் அரசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள, 93 சதவீதம் கார்டு தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு, முழு கரும்பு மற்றும் 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.பொங்கல் தொகுப்பு, 7 சதவீதம் பேர் வாங்காததால், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கரும்பு மீதமாகி உள்ளது. இந்த கரும்புகளை, ரேஷன்கடை ஊழியர்கள் ஒரு கரும்பு 24 ரூபாய் வீதம் விற்பனை செய்து, பணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்ததாக ரேஷன்கடை ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் கூறுகையில், ''இது தவறான தகவல். அதிகாரிகள் யாரும் அப்படி தெரிவிக்கவில்லை. ஒரு டி.வி.,யில் வந்த 'ஸ்க்ரோலிங்' செய்தியை பார்த்து விட்டு, வீண் வதந்தியை பரப்பி வருகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை