உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்குபேஷன் மையம் அமைக்க முதல்வரிடம் சியா கோரிக்கை

 இன்குபேஷன் மையம் அமைக்க முதல்வரிடம் சியா கோரிக்கை

கோவை: முதல்வர் ஸ்டாலினிடம், சின்னவேடம்பட்டி தொழிற்துறை சங்க (சியா) தலைவர் தேவகுமார் அளித்த மனு: கோவை வடக்குப் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் வடிகால் பணிகளை விரைவில் மேம்படுத்த வேண்டும். இங்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் இயங்குகின்றன. போக்குவரத்து சிரமம் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கிறது. மாநில ஜி.எஸ்.டி., அலுவலகத்தால் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ்கள் குறித்து, மறு பரிசீலனை செய்ய வேண்டும். சின்னவேடம்பட்டி ஏரியை குடிநீர் மற்றும் மழை நீர் சேகரிப்பு ஏரியாக மாற்ற வேண்டும். சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், இப்பகுதியில், இயந்திர பொறியியல் சார்ந்த தொழில்வளர் மையம் (இன்குபேஷன் மையம்) அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை