உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சார் - பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய போலீஸ் ரெய்டு கணக்கில் வராத ரூ. 1.32 லட்சம் பறிமுதல்

சார் - பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய போலீஸ் ரெய்டு கணக்கில் வராத ரூ. 1.32 லட்சம் பறிமுதல்

அன்னுார்,:கோவை மாவட்டம், அன்னுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், அதிக அளவில் லஞ்சம் புழங்குவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, மாவட்ட ஆய்வு குழு ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் எட்டு பேர் குழு நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு அன்னுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தது.அலுவலகத்தில அந்த குழு விடிய விடிய சோதனை நடத்தியது. 12 மணி நேர சோதனைக்கு பின், அலுவலகத்தில் இருந்து, கணக்கில் வராத 1.32 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சார் - பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பத்திரப்பதிவுத்துறை தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பத்திர எழுத்தர்கள் இருவரின் அலுவலகத்திலும் சோதனை நடத்தி பணம் கைப்பற்றப்பட்டது. எனினும் அவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து, அந்த தொகை திருப்பி வழங்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ