சூரிய சக்தி மின் திட்ட முகாம்; பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
கோவில்பாளையம்; குரும்பபாளையத்தில் இன்று சூரிய சக்தி மின் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. மத்திய அரசு சார்பில், வீடுகளுக்கான பிரதம மந்திரியின் சூரிய சக்தி மின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் வீடுகளில் சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதையடுத்து கோவில்பாளையம் அருகே, குரும்பபாளையம், ஸ்ரீவாரி கார்டன், சமுதாய நலக்கூடத்தில் இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1 :30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் வீடுகளில் சூரிய மின் சக்தி அமைப்பு பொருத்துவது, அதற்கான செலவு, மானியம், கிடைக்கும் பயன்கள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்க உள்ளனர். இத்திட்டத்திற்கு கடன் தர வங்கி அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 'எனவே, பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்,' என உதவி மின் பொறியாளர் அழைப்பு விடுத்துள்ளார்.