| ADDED : பிப் 23, 2024 12:03 AM
கோவை:கல்லுாரி மாணவர்களுக்கான தென் மாநிலங்கள் அளவிலான கால்பந்து போட்டியின், இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று கோவை அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி சார்பில் தென்னிந்திய அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான '18ம் ஆண்டு எஸ்.என்.ஜி.சி., சுழற்கோப்பைக்கான' போட்டிகள் க.க சாவடி நாராயணகுரு கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 21 அணிகள் பங்கேற்றுள்ளன.முதல் சுற்றுப்போட்டியில், கேரளா மலப்புரம் எஸ்.எஸ்., கல்லுாரி அணி 3 - 2 என்ற கோல் கணக்கில், கோவை ஏ.ஜே.கே., கல்லுாரி அணியையும், நாராயணகுரு கல்லுாரி அணி 3 - 0 என்ற கோல் கணக்கில், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லுாரி அணியையும் வீழ்த்தின. நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் சுற்றுப்போட்டியில் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் அமிர்தா பல்கலை அணியையும், கற்பகம் பல்கலை அணி 2 - 1 என்ற கோல் கணக்கில், சி.எம்.எஸ்., அணியையும் வீழ்த்தி, காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.