உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் இன்று மாநாடு

 தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் இன்று மாநாடு

போத்தனூர்: மலுமிச்சம் பட்டியில் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ. சார்பில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கும் பிரசார மாநாடு, இன்று மாலை நடக்கிறது. இதில் மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் மாநில நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநில தலைவர் உள்ளிட்டோர் அமரும் மேடை புனித ஜார்ஜ் கோட்டையினை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன் கூறுகையில், ''அடுத்தாண்டு நடக்கவுள்ள மாநில சட்டசபை தேர்தலில், என்.டி.ஏ., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி, அப்போது சட்டசபையில் அமரப்போவதை நினைவுபடுத்தும் வகையில், இம்மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை