உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்

ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்

கோவை: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் வகையில் இ.கே.ஒய்.சி., பதிவு நடக்கிறது. 2023 அக்டோபர் முதல் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மூலம் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21 சதவீதம் இ.கே.ஒய்.சி.  பதிவு முடிந்துள்ளது. மீதமுள்ளதையும் நிறைவு செய்யும் வகையில், ஆக. 29ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. இதுவரை பதிவு செய்யாதவர்கள் முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ