கே.எம்.சி.எச்., சூலுார் மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் மற்றும் கோவை ராம் நகரில் உள்ள சிட்டி சென்டர் ஆகிய இடங்களில் சிறப்பு இருதய பரிசோதனை முகாம், வரும் 29ம் தேதி வரை நடக்கிறது.கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை இருதயத்துறை நிபுணர்கள் கூறியதாவது:இருதயத்தில் பாதிப்பு மற்றும் ரத்தக்குழாய் அடைப்பால் மாரடைப்பு ஏற்படுகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு, உடல் பருமன், புகை பிடித்தல், உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இருதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது.40 வயதிற்கு மேல் மாரடைப்பு வருவது பொதுவாக உள்ளது. இதை தடுக்க, ரத்தத்தில் சர்க்கரை அளவு, இசிஜி, ரத்தத்தில் கொழுப்பு, இரத்த அழுத்தம், டிஎம்டி எக்கோ ஆகிய பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம். இந்த பரிசோதனை முடிவில் இருதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை கண்டறிந்து, உரிய சிகிச்சை பெறலாம்.மேலும், இருதய அடைப்பை உறுதி செய்ய ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும். அடைப்பு இருந்தால், ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக, அடைப்புகள் நீக்கி இருதயத்தை பாதுகாக்கலாம்.இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, தினமும் யோகா, தியானம் செய்வது, தினமும் குறைந்தது, 30 நிமிடம் உடற்பயிற்சி, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்தல், தினமும் குறைந்தது, 7 மணி நேரம் உறக்கம், அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.கே.எம்.சி.எச்., சூலுார் மற்றும் கோவை ராம்நகர் சென்டரில் சிறப்பு இருதய பரிசோதனை முகாம், பிப்.,29-ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், அடிப்படை பரிசோதனைகளான சர்க்கரை கண்டறிதல், கொழுப்புச் சத்தின் அளவு, கிரியேட்டினின், ஈசிஜி, எக்கோ/டிஎம்டி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.1,750. இத்துடன், மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை சலுகைக் கட்டணத்தில் மேற்கொள்ளலாம்.முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.