உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் பவன்குமார், மருத்துவர்கள், ஒன்றிய அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், பல், கண் மருத்துவம், மனநலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எலும்பு மூட்டு சிகிச்சை, தோல் மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், ரத்தம், சளி மற்றும் சிறுநீர் எச்.ஐ.வி., பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும், மாற்றத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும், மருத்துவ காப்பீடு அட்டையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமில், பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் மருந்து பெட்டி தொகுப்பினை வழங்கினார். மருத்து வ உபகரணங்கள் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பயனாளிகளிடம் உடல் நலம் மற்றும் முகாமின் குறை நிறைகளை கேட்டறிந்தார். இதில், 2,094 பயனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி