உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கோவை: கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய இம்முகாமை, மாவட்ட கலெக்டர் பவன்குமார் துவங்கி வைத்து, மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். மருத்துவ குழுவினர், 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் மாணவர்களை பரிசோதித்து, அவர்களின் மாற்றுத்திறன் அளவீடுகளை மதிப்பீடு செய்தனர். தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், புதிய தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து மற்றும் ரயில் பயண அட்டைகள் பெறுதல், அறுவைச் சிகிச்சை மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாணவர்களுக்கு பரிந்துரை செய்து பதிவு செய்யப்பட்டன. இந்த முகாமில் 44 பேருக்கு புதிய தேசிய அடையாள அட்டைகளும், 12 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அட்டைகளும் வழங்கப்பட்டன. மேலும், 14 பேரின் அட்டைகள் புதுப்பித்து வழங்கப்பட்டன. இத்தகைய மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்கள் சூலூர், கோவை நகரம், கிணத்துக்கடவு உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களிலும் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாவட்டக் கல்வி அலுவலர் (உயர்நிலை) கோமதி, உதவி திட்ட அலுவலர் மூர்த்தி, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ரவிச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ