| ADDED : டிச 31, 2025 05:06 AM
கோவை: மருத்துவத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கோவையில் முதன்முறையாக, பிரம்மாண்டமான 'ஹெல்த்கேர் ஐ.டி.,' மாநாட்டை நடத்தியது. கூகுள் நிறுவனத்தின் சிலிக்கான் பிரிவின் மூத்த இயக்குனர் சுபாஷ் சந்தர் கோவிந்தராஜன் மற்றும் எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை வகித்தனர். நோயாளிகளின் சிகிச்சையை மேம்படுத்தும் நவீன தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, தரவு பாதுகாப்பு, டிஜிட்டல் ஸ்கேன் தொழில்நுட்பம், பழைய மென்பொருள் முறைகளை மாற்றி புதிய வேகமான தொழில்நுட்பங்களை புகுத்துவது மற்றும் அதிக மருத்துவத்துறையில் பணியாற்றுவோர் வேலை - வாழ்க்கை சமநிலையை எப்படி பாரமரிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ராம்குமார், மகேஷ்குமார், மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண் காணிப்பா ளர் அழகப்பன், மாநாட்டின் தலைமை அமைப்பாளர் விஸ்வநாத் தனராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.