உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில விளையாட்டு போட்டி

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. பார்வையற்றோருக்கான வாலிபால், அமர்வு கைப்பந்து, காது கேளாதோற்கான கபடி, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டிகள் நடந்தன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 33 அணிகள் பங்கேற்றன. இறுதி அமர்வு கைப்பந்து போட்டியில், முதல் நான்கு இடங்களை முறையே கோவை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, வேலுார் அணிகள், காது கேளாதோருக்கான கபடி போட்டியில், முதல் நான்கு இடங்களை முறையே தேனி, தஞ்சாவூர், கோவை, பெரம்பலுார் மாவட்ட அணிகள் வெற்றி பெற்றன. மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டியில், முதல் நான்கு இடங்களை முறையே சேலம், சென்னை, கோவை, நெல்லை அணிகள் வென்றன. பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான கைப்பந்து போட்டியில், முதல் நான்கு இடங்களை முறையே காஞ்சிபுரம், சென்னை, தர்மபுரி, கன்னியாகுமரி அணிகள் வென்றன. முதல் நான்கு இடங்கள் பிடித்த அணிகளுக்கு முறையே, 15,000, 12,000, 10,000, 8,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும், கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை