உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிகளில் ஸ்டேஷனரி ஸ்டோர் பெற்றோர் எதிர்பார்ப்பு

அரசு பள்ளிகளில் ஸ்டேஷனரி ஸ்டோர் பெற்றோர் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி : அதிக மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 'ஸ்டேஷனரி ஸ்டோர் ' அமைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்னளர்.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பாடத்துக்கு ஏற்றாற்போல் மாணவர்களுக்கு பேனா, பென்சில், ரப்பர், ஜாமின்ட்ரிபாக்ஸ், பேப்பர், ஸ்கேல், நோட்டுகள் என, பல்வேறு பொருட்கள் தேவைப்படுகின்றன.இதனை கருத்தில் கொண்டு, பள்ளி அருகிலேயே தனியாரால் ஸ்டேஷனரி ஸ்டோர் அமைக்கப்படுகிறது. சில கடைகளில், கூடுதல் விலைக்கு தரமின்றி இத்தகையப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், மாணவர்கள் பாதிக்கின்றனர்.எனவே, மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'ஸ்டேஷனரி ஸ்டோர்' அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பெற்றோர் கூறியதாவது:அரசு பள்ளிகளில் 'ஸ்டேஷனரி ஸ்டோர்' அமைத்து, ஸ்கூல் பேக், பவுச், பேனா, பென்சில், ரப்பர், நோட்டு, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் உள்ளிட்ட ஏராளமானப் பொருட்களை விற்பனை செய்யலாம்.சலுகை விலையில் வழங்கினால், ஏழை, எளிய மாணவர்கள் பயனடைவர். ஏதேனும் ஒரு பொருள் இல்லையெனினும், பள்ளி நேரத்திலேயே அப்பொருளை மாணவர்கள் எளிதாக வாங்க முடியும்.இதன் வாயிலாக கிடைக்கப்பெறும் வருவாயை, பள்ளி மேம்பாட்டிற்கு செலலவிடலாம். பள்ளி மேலாண்மை குழுவினரை ஒருங்கிணைத்து, ஸ்டேஷனரி ஸ்டோர் அமைக்க நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ