உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்பந்து போட்டியில் மாணவர்கள் அபாரம் 

கால்பந்து போட்டியில் மாணவர்கள் அபாரம் 

கோவை : மாவட்ட அளவில் நடந்த, பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில், மாணவர்கள் அபாரமாக விளையாடினர். ஸ்ரீ கோபால் நாயுடு கல்வி அறக்கட்டளை சார்பில், 'ராவ் பகதுார் ஸ்ரீ கோபால் நாயுடு நினைவு கோப்பை' கால்பந்து போட்டி, கோபால் நாயுடு பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் 19 பள்ளிகளை சேர்ந்த அணிகள், நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. இதில், நேற்று நடந்த அரையிறுதிப்போட்டியில் சி.எஸ்.அகாடமி பள்ளி அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில் கோபால் நாயுடு பள்ளி அணியையும், கார்மல் கார்டன் பள்ளி அணி 4 - 3 (டை பிரேக்கர்) என்ற கோல் கணக்கில், பயனீர் மில்ஸ் பள்ளி அணியையும் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ