உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜூடோ போட்டியில் அசத்திய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

ஜூடோ போட்டியில் அசத்திய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

கோவை;மாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டியில் அனுப்பர்பாளையம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு பெரம்பலுார் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலை பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் ஜூடோ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்கள் குவித்துள்ளனர். அதேபோல், டாடபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி நிரஞ்சனா, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த சாக்ஸாபோன் கலைஞர் என்ற விருதினையும், கலை இளமணி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.இவர்கள் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கமிஷனர் சிவகுரு பிரபாகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். துணை கமிஷனர் செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ