உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் சப் - கலெக்டர் ஆய்வு 

அரசு மருத்துவமனையில் சப் - கலெக்டர் ஆய்வு 

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா ஆய்வு செய்தார். மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, டாக்டர்கள் உடன் இருந்தனர்.அப்போது, மருத்துவமனையில் உள்ள வசதிகள், எந்தந்த துறைகள் உள்ளன, டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் எவ்வளவு பேர், மருத்துவமனை தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தற்போது கட்டப்பட்டு வரும் புதிய கட்டடங்கள், ஏற்கனவே கட்டப்பட்டு திறப்பதற்காக உள்ள கட்டடங்கள், மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, பொள்ளாச்சி கங்கா மருத்துவமனையுடன் இணைந்து, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மாதம் ஒரு முறை செய்யும் ஆரம்ப கட்ட மார்பக புற்றுநோய் முகாம் நடப்பதை பார்வையிட்டார்.கடந்த ஆண்டில், 750 பெண்களுக்கு, 30வயது கடந்த நிலையில் உள்ளோருக்கு ஆய்வு செய்யப்பட்டது. அதில், 19 பேருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக இலவச சிகிச்சை அளிக்கப்பட்டதாக டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து, குழந்தைகள் பிரிவில், உள் நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. குழந்தைகள் நலப்பிரிவுக்கு, மத்திய அரசு, 'முஸ்கான்' தர சான்றிதழ் வழங்கியுள்ளது.குழந்தைகள் நலப்பிரிவில், ஒரு ஆண்டுக்கு வெளிநோயாளிகளாக, 54,300 பேர் பயன்பெறுகின்றனர். ஒரு ஆண்டுக்கு உள்நோயாளியாக, 1,950 பேர் பயன்பெறுகின்றனர். குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், 800 பேர் ஒரு ஆண்டுக்கு பயன்படுகின்றனர். பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில், ஒரு ஆண்டுக்கு, 1,400 பேர் பயன்பெறுகின்றனர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை