| ADDED : டிச 12, 2025 05:19 AM
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சியில், துணை சுகாதார நிலையம் துவக்க வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாமி - சாந்தா மணி தம்பதியின் வாரிசுதாரர்கள், துணை சுகாதார நிலையம் கட்ட, 10 சென்ட் நிலத்தை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறைக்கு அளித்தனர். அந்த இடத்தில், 65.38 லட்சம் ரூபாய் செலவில், எல்.எம்.டபிள்யூ., நிறுவனம் மற்றும் ஜி.கே.டி., சேவை அறக்கட்டளை சார்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கட்டடம், 4 ஆயிரத்து, 574 சதுரடியில் கட்டப்பட்டது. கலெக்டர் பவன்குமார் நேற்று திறந்து வைத்தார். நிலம் தானமாக வழங்கிய பரமசிவன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளை கலெக்டர் கவுரவித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி முன்னாள் தலைவர் வேலுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதிய துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.