மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
3 minutes ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
4 minutes ago
வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
4 minutes ago
கோவைக்கு கிடைத்தது விருது
5 minutes ago
கோவை: வைரஸ் தொற்றால் ஏற்பட்ட கடுமையான இதய செயலிழப்பால், பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன், வேறொரு தனியார் மருத்துவமனையிலிருந்து, ராயல் கேர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். வேறு எந்த சிகிச்சை முறையும் பலனளிக்காத நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அச்சிறுவன் உயிர் பிழைக்க ஒரே வழி என்று, மருத்துவக் குழு தீர்மானித்தது. சிறுவனுக்கு தானமாக கிடைத்த இதயம் 30 வயதுடையவரது என்பதால், சிறுவனின் இதயத்தை விட ஐந்து மடங்கு பெரியதாக இருந்தது. மூளைச் சாவால் ஏற்பட்ட சில ஆரம்பகால பாதிப்புகளும் அதில் இருந்தன. இருப்பினும், இந்தச் சவால்களை எதிர்கொண்டு, மருத்துவக் குழு அந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையைத் துணிச்சலாக மேற்கொண்டு வெற்றி கண்டது. மூன்று மாத தீவிர சிகிச்சைக்குப் பிறகு, சிறுவன் பூரண குணமடைந்து, தற்போது வீடு திரும்பத் தயாராக உள்ளான். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதீப், மயக்கவியல் நிபுணர் டாக்டர் கிருபானந்த், தீவிர சிகிச்சை மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர் சிவகுமார், செவிலியர்கள் மற்றும் குழுவினரை, ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் பாராட்டினார்.
3 minutes ago
4 minutes ago
4 minutes ago
5 minutes ago