மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
2 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
2 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
2 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
2 hour(s) ago
கோவை;பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த இடங்களில் தரமற்ற பணிகளால் ரோடுகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது, வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு விபத்துஅபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால், 24 மணி நேர குடிநீர் திட்டம் உட்பட பல்வேறு பணிகள், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகின்றன. இப்பணிகளில் ஏற்படும் தாமதத்தால், புதிதாக ரோடு போடும் பணிகள் தடைபடுவதாக, கவுன்சிலர்கள் குமுறுகின்றனர்.அதேசமயம், அவசர அவசரமாக பணிகளை முடிப்பது, தரமற்ற கட்டுமானம் உள்ளிட்ட காரணங்களால் ரோட்டில் விரிசல், பெரிய பள்ளம், ரோடு கீழே இறங்குதல் போன்ற அபாயகர நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.மாநகராட்சி, 66வது வார்டு, புலியகுளம் விநாயகர் கோவில் அருகே சமீபத்தில் பாதாள சாக்கடை குழாய் மாற்றும் பணி நடந்தது. இங்கு கோவிலையொட்டி, குழந்தைகள் உள்ளே விழும் அளவுக்கு பெரிய பள்ளம்ஏற்பட்டுள்ளது; சுற்றிலும் 'பேரிகார்டு' மட்டும் வைக்கப்பட்டுள்ளது.விநாயகர் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில், இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்.அதேபோல், புரூக்பீல்ட் ரோட்டில் சிரியன் சர்ச் எதிரே, சாக்கடை கால்வாய் செல்லும் இடத்தில், ரோட்டின் நடுவே ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது.இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் இதனால், பெரும் விபத்துகளை சந்திக்க நேரிடும். சிங்காநல்லுார், போயர் வீதியில் இருந்து ஆனையங்காடு செல்லும் ரோட்டின்வளைவில், கழிவு நீர் சாக்கடை 'ஸ்லாப்' மோசமான நிலையில் உள்ளது.மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்துக்கு பின்புறம், நுற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் ரோட்டின் நடுவேயே, இப்படிப்பட்ட அவலம் இருப்பது வேதனைக்குரியது. அலட்சியத்தாலும், தரமற்ற பணிகளாலும், பாதிக்கப்படுவது மக்கள்தான்.மாநகராட்சி உயர் அதிகாரிகளும், கவுன்சிலர்களும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago