| ADDED : டிச 30, 2025 05:09 AM
கோவை: சூப்பர் சரவணா ஸ்டோர்சில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலத்தை முன்னிட்டு, தங்க நகை பரிசுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஆறு கிளைகளிலும், தினமும் ஒரு வாடிக்கையாளர் வீதம் தேர்வு செய்யப்படுகின்றனர். 30 நாட்களில் 180 வாடிக்கையாளர்களுக்கு, ஒன்றரை கிலோ எடையுள்ள தங்க நகைகள் ரூ. 1.8 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது. ஒப்பணக்கார வீதி, சூப்பர் சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் தங்க நகை பரிசுத்திட்ட அறிவுத்திறன் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று, பரிசுக்கூப்பனை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர். கோவையில் முதல் 10 நாட்களில் தேர்வு செய்யப்பட்ட 10 வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு லட்சம் மதிப்புள்ள எட்டு கிராம் தங்கநகையை, சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் சபாபதி வழங்கினார். சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் இயக்குனர் சுனிதா உடனிருந்தார்.