உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்வஸ்திக் பள்ளி மாணவர்கள் யோகாவில் உலக சாதனை

ஸ்வஸ்திக் பள்ளி மாணவர்கள் யோகாவில் உலக சாதனை

பொள்ளாச்சி';பொள்ளாச்சி அருகே, நெகமம் சின்னேரிபாளையத்தில், ஸ்வஸ்திக் மெட்ரிக்குலேசன் பள்ளியில், யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக சாதனை நிகழ்வு நடந்தது. பள்ளியின் தாளாளர் தீபா தலைமை வகித்தார்.அதில், மாணவர்கள், காஞ்சனா ஆசனத்தில், 20 நிமிடங்கள் அசைவற்று இருந்து, குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். இவர்களுக்கு யோகா ஆசிரியர் கிருஷ்ணராஜ், பயிற்சி அளித்தார்.பெங்களூரு குளோபல் உலக சாதனை நிறுவன உறுப்பினர் மற்றும் ஆசிரியர்கள் நீலவேணி, மோகன்ராஜ், தமிழரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை