உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தை அமாவாசை சிறப்பு வழிபாடு

தை அமாவாசை சிறப்பு வழிபாடு

பேரூர்;தை அமாவாசையை முன்னிட்டு, பொதுமக்கள் மூதாதையருக்கு வழிபாடு நடத்தினர்.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், தை அமாவாசை தினமான நேற்று, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், தங்கள் முன்னோர்களுக்கு படித்துறையில் தர்ப்பணம் கொடுத்தனர்.தொடர்ந்து, மூதாதையர் நற்கதி அடைய வேண்டி, நெய் தீபமேற்றி வழிபட்டனர். உச்சிகால பூஜையில் பங்கேற்று, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனை வழிபட்டனர்.காலை முதலே, நொய்யல் ஆற்றங்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. பேரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில், மருத்துவ முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை