உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழை, ஜாதிக்காய் ஊடுபயிர் சாகுபடிக்கு இலக்கு; பாசன சபை கூட்டத்தில் தகவல்

வாழை, ஜாதிக்காய் ஊடுபயிர் சாகுபடிக்கு இலக்கு; பாசன சபை கூட்டத்தில் தகவல்

ஆனைமலை : 'ஆனைமலையில், வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்,' என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்தார்.வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டத்தின் முதற்கூட்டம், ஆனைமலை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நடந்தது. ஆழியாறு உபவடி நீர் பாசன சபை தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:ஆனைமலை ஒன்றியத்தில், 2024 - 25ம் ஆண்டு தமிழ்நாடு பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டமானது, ஆழியாறு உபவடி நீர் நிலை பகுதிகளான ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், காளியாபுரம், ஒடையகுளம், பெரியபோது, கோட்டூர், தென்சங்கம்பாளையம், மார்ச்சநாயக்கன்பாளையம், சோமந்துறைசித்துார் ஆகிய, ஒன்பது கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக வாழை மற்றும் ஜாதிக்காய் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதில், ஒரு ெஹக்டேர் ஜாதிக்காய் பயிரிடும் விவசாயிகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜாதிக்காய் நாற்றுகள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட உள்ளது.வாழை சாகுபடிக்கு, ஒரு ெஹக்டேருக்கு, 26 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு திசு வாழைக்கன்றுகள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட உள்ளது.இந்தாண்டு வாழை கன்று ஊடுபயிராக, 148 ெஹக்டேரும்; ஜாதிக்காய் ஊடுபயிராக, 209 ெஹக்டேரும்; நிலப்போர்வை நான்கு ெஹக்டேரும் இலக்காக பெறப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகத்துக்கு சிட்டா, அடங்கல், உரிமை சான்று, ஆதார் நகல், புகைப்படம், வங்கி புத்தக நகலுடன் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை