மேலும் செய்திகள்
39,761 குழந்தைகளுக்கு 'வைட்டமின் ஏ' திரவம்
28-Oct-2025
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில், 11,950 குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, காரமடை வட்டார சுகாதாரத்துறையினர் கூறியதாவது:- கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகையில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என 144 மையங்களில், 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நேற்று முன் தினம் முதல் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை (31ம் தேதி) வரை இப்பணிகள் நடைபெறும். சுமார் 11,950 குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த களப்பணியாளர்கள் வாயிலாக குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
28-Oct-2025