உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல்;வாலிபர் கைது

டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல்;வாலிபர் கைது

சூலுார்:சூலுாரில் டாஸ்மாக் விற்பனையாளரை பாட்டிலால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.சூலுார் மதியழகன் நகரை சேர்ந்தவர் சண்முகம், 46, கலங்கல் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ( எண்:1837 ) விற்பனையாளராக உள்ளார். நேற்று முன் தினம் மாலை கடைக்கு வந்த சூலுார் ஜீவா நகரை சேர்ந்த பிரவீன் குமார், 33, மது கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை. கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதாக கூறியுள்ளார்.அதற்கு சண்முகம், கடையில் கூகுள் பே வசதி இல்லை; பணத்தை கொடுத்து மது வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திமடைந்த பிரவீன் குமார், மது பாட்டிலால் சண்முகத்தின் முகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். காயமடைந்த சண்முகத்தை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், பிரவீன் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை