| ADDED : ஜன 05, 2024 01:15 AM
கோவை;கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உணவு திருவிழா இன்று துவங்குகிறது.கோயம்புத்துார் விழாவின் ஒரு பகுதியாக கோவை ஓட்டல்கள் சங்கம் சார்பில், 5,6,7 ஆகிய மூன்று நாட்கள் உணவு திருவிழா கொடிசியா மைதானத்தில் நடத்தப்படுகிறது.இன்று மாலை 5:00 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் துவக்கி வைக்கிறார். மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மில்கி மிஸ்ட் டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஸ்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றுகின்றனர்.இதில், கோவையை சேர்ந்த, 100 ஓட்டல்கள் பங்கேற்கின்றன. மொத்தம், 160 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. சைவ, அசைவ உணவுகள், கேக் , ஐஸ்கிரீம் என அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும்.இந்த உணவு திருவிழாவில் பங்கேற்க நுழைவு கட்டணம், 249 ரூபாயாகும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை.பல பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.கோவையில் உள்ள அனைத்து முன்னணி உணவகங்களிலும் டிக்கெட் கிடைக்கும். மூன்று நாட்களும் மதியம் 2:00 மணி முதல் கொடிசியா மைதானத்தில் டிக்கெட் கிடைக்கும்.