உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குமரன் குன்று கோவிலில் தெப்போற்சவம்

குமரன் குன்று கோவிலில் தெப்போற்சவம்

அன்னுார்:குமரன் குன்று கோவில் தேர்த்திருவிழாவில் நேற்று முன்தினம் தெப்போற்சவம் நடந்ததுகுமரன் குன்று, கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 25ம் தேதி காலையில் திருக்கல்யாண உற்சவமும், மாலையில் தேரோட்டமும் நடந்தது. 26ம் தேதி காலை கோவில் வளாகத்தில் கிராமங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் காவடி சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு பரிவேட்டை நடந்தது.கடந்த 27ம் தேதி இரவு கல்யாண சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை சமேதரராக தெப்பத்தில் உலா வந்து அருள்பாலித்தனர். நேற்று காலை, பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது.இதையடுத்து மகா தரிசனமும், மஞ்சள் நீர் உற்சவமும் நடந்தது. அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகையை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வருகிற 31ம் தேதி காலை 10:00 மணிக்கு மறுபூஜை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ