உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / களைகட்டியது பொங்கல் விழா கொண்டாட்டம்

களைகட்டியது பொங்கல் விழா கொண்டாட்டம்

-நிருபர் குழு-மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னுார், சூலுார் வட்டாரப் பகுதிகளில், பல்வேறு அமைப்புகள் சார்பில், பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே, சுதந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை மணிமலர் வரவேற்றார். லயன்ஸ் சங்க உறுப்பினர் ஜெயராமன், சுப மருத்துவமனை டாக்டர் மகேஸ்வரன், காஜாமைதீன், விக்னேஷ் ஆகியோர் பொங்கல் விழா குறித்து பேசினர்.பள்ளி ஆசிரியர்கள் முத்துசங்கையா, திலகவதி, சகாய எமில்டா, ஜெயலட்சுமி மற்றும் பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியை கொடிமலர் நன்றி கூறினார்.* ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியை புனிதா செல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக காஜா மைதீன், நகராட்சி பணியாளர் ஜெயராமன், சமூக ஆர்வலர் விக்னேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீர்த்திகா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.ஆசிரியைகள் உமா, அக்சாள் பொங்கல் விழா பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறினர். ஆசிரியை அமல சிந்திய நன்றி கூறினார்.* மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், பொங்கல் விழா நடைபெற்றது. ஞாயிறு திருப்பலியை, பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் தலைமையில், பாதிரியார் ஜோ டேனியல் நிறைவேற்றினார். தொடர்ந்து பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.* பெரியநாயக்கன்பாளையம் யுவா பப்ளிக் பள்ளி வளாகத்தில், தாளாளர் சத்யா அறிவரசு, முதல்வர் ராஜேஸ்வரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாடினர். குழந்தைகள், கம்பு, கேழ்வரகு ஆகியவற்றில் சமைத்த உணவுகளை கொண்டு வந்து நண்பர்களுடன் பகிர்ந்து உண்டனர். பொங்கல் நாடகம், கலை நிகழ்ச்சிகள், கும்மி, ரங்கோலி போட்டிகள் நடந்தன.* துடியலுார் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனியில், நாயர் கல்வி நிறுவனத்தின் சார்பில், கல்வியியல் கல்லுாரி வளாகத்தில், மாணவ, மாணவியரின் கோலப்போட்டி, ஆடல் பாடல், உறியடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.* பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில், பலுான் உடைத்தல், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் பங்கேற்றனர்.* துடியலுார் அருகே, வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில், தமிழ் மன்றம், என்.எஸ்.எஸ்., இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.தமிழர் வீர விளையாட்டுக்கள், பறையடித்தல், சிலம்பம் சுற்றுதல், வள்ளி கும்மி நிகழ்ச்சிகளை நடத்தினர்.* பெரியநாயக்கன்பாளையம் தேசிய மனித மேம்பாட்டு மையம் சார்பில், மையத்தில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து, ஓய்வு பெற்ற பேராசிரியர் இளங்கோவன் விளக்கினார். சூரிய பொங்கல் படைத்து, பாரம்பரிய கும்மி பாடல்களுடன் விழா கொண்டாடப்பட்டது. பாடல், இசை நாற்காலி, பாட்டில்களில் நீர் நிரப்புதல், பலுான் உடைத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விழா ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் சரசு, இயக்குனர் சகாதேவன் ஆகியோர் மேற்கொண்டனர்.* துடியலுார் அருகே வரப்பாளையத்தில், பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நாட்டுப்புற பாடல்கள், நடனம், பட்டிமன்றம் நடத்தப்பட்டன. பள்ளி வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு, சூரியனுக்கு படைத்து வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் நாகேஸ்வரி, பூங்கொடி, ரெஜி ஆகியோர் செய்திருந்தனர்.* அன்னுாரில், அரசு உதவி பெறும் கே.ஜி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவியர் கும்மி ஆட்டம் ஆடினர். பொங்கல் பண்டிகையின் சிறப்பு குறித்து தலைமை ஆசிரியை ஆண்டாள் பேசினார். பள்ளி நிர்வாக அறங்காவலர் ராமசாமி, அறங்காவலர் சாந்தாமணி ராமசாமி, பள்ளி செயலர் பாக்கியலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.* வையம்பாளையத்தில், ஏழு ஏக்கர் பரப்பளவில் தடுப்பணை உள்ளது. இங்கு வையம்பாளையம் கவுசிகா அமைப்பு சார்பில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.32 ஆண்டுகளுக்கு பின், இந்தாண்டு கவுசிகா நதியில் மழை நீர் வெள்ளம் போல் சென்றதையடுத்து, நதிக்கு நன்றி தெரிவிக்க பொங்கல் விழா நேற்று நடத்தப்பட்டது.கவுசிகா நீர் கரங்கள் அமைப்பின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள், திரளாக பங்கேற்றனர். களப்பணி செய்த சிறுவர், சிறுமியர் கவுரவிக்கப்பட்டனர். அக்ரஹார சாம குளத்திலும் பொங்கல் விழா தன்னார்வலர்கள் சார்பில் நடைபெற்றது.* சூலுார் அடுத்த பள்ளபாளையம் விவேகானந்த கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளியில், பொங்கல் விழா நடந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணா டிரஸ்டின் செயலாளர் சுவாமி ஸ்ரீ ஆத்ம ராமானந்தா பேசினார். இயக்குநர் சுந்தரநாதன், தலைமையாசிரியை வனிதா மணி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை