| ADDED : ஜன 29, 2024 11:29 PM
வால்பாறை:காடம்பாறை ரோட்டில், அரசு பஸ்சை ஒற்றை யானை வழிமறித்ததால், பயணியர் அலறினர்.வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில், பருவமழைக்கு பின் வனவளம் செழிப்பாக இருப்பதால், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு எஸ்டேட் பகுதியில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.இங்குள்ள தேயிலை எஸ்டேட்டின் அருகில் உள்ள, துண்டு சோலையில் முகாமிட்டுள்ள யானைகள் உணவு, குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சியிலிருந்து அட்டகட்டி வழியாக காடம்பாறை அணைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. மேல்ஆழியாறு அருகே உள்ள மரப்பாலம் ரோட்டில் ஒற்றை யானை திடீரென பஸ்சை வழிமறித்தது. டிரைவர் சாமார்த்தியமாக பஸ்சை பின்நோக்கி இயக்கியதை கண்ட யானை, சிறிது நேரத்திற்கு பின் வனப்பகுதிககுள் சென்றது.அதன்பின், பஸ்சை டிரைவர் இயக்கியுள்ளார். இதனால், பஸ்சில் பயணம் செய்த பயணியர் நிம்மதியடைந்தனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை அடுத்துள்ள காடம்பாறை ரோட்டில் யானைகள் முகாமிட்டுள்ளதால், வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும், வாகனத்தை விட்டு யாரும் கிழே இறங்கி போட்டோ எடுக்கவோ, 'செல்பி' எடுக்கவோ கூடாது. இதனால், வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது,' என்றனர்.