உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கலுக்கு சென்ற தொழிலாளர்கள் வெறிச்சோடிய தொழிற்சாலைகள்

பொங்கலுக்கு சென்ற தொழிலாளர்கள் வெறிச்சோடிய தொழிற்சாலைகள்

சோமனூர் : விசைத்தறி தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட,சொந்த ஊருக்கு சென்றதால், தொழிற்சாலைகள் வெறிச்சோடியுள்ளது.கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான விசைத்தறிகள், 24 மணி நேரமும் இடைவிடாது இயங்கி வரும். அனைத்து பகுதிகளிலும் விசைத்தறிகளின் சத்தம் எந்நேரமும் கேட்டு கொண்டே இருக்கும். இதேபோல், ஸ்பின்னிங் மில்களும் தொடர்ந்து இயங்கி வரும்.இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட, கடந்த இரு நாட்களுக்கு முன், அனைத்து தொழிலாளர்களும் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிந்த பின் தான் சோமனூர் வருவார்கள். சோமனூர் பகுதி முழுக்க விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், விசைத்தறிகள் ஓய்வில் உள்ளன. இதனால், சோமனூர் சுற்றுவட்டார பகுதிகள் வெறிச்சோடி உள்ளது.இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில்,' பெரும்பாலான தொழிலாளர்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றுள்ள அவர்கள் வந்த பின்னர் தான், விசைத்தறிகள் முழுமையாக இயங்க துவங்கும். பாவு நூல் இருக்கும் ஒரு சில விசைத்தறி கூடங்களில், உரிமையாளர்களே விசைத்தறிகளை இயக்க துவங்கியுள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை