உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நியூஸ்கீம் ரோடு ஓல்டு ஆயிருச்சு; சீக்கிரம் சீரமைக்கணும்!

 நியூஸ்கீம் ரோடு ஓல்டு ஆயிருச்சு; சீக்கிரம் சீரமைக்கணும்!

நியூஸ்கீம் ரோடு சேதம் பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் 'யுடேர்ன்' பகுதிகளில் ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இத்துடன் ரோட்டோரத்தில் அதிக அளவு வாகனங்களும் 'பார்க்கிங்' செய்யப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் ரோட்டை சீரமைக்கவும், போலீசார் சார்பில் வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- மனோஜ்: வாகனங்களால் இரைச்சல் பொள்ளாச்சி நகர் பகுதிகளில் பைக்குகளில் சைலன்ஸரை மாடிபிகேஷன் செய்து அதிகளவு சப்தத்துடன், பைக் ஓட்டுநர்கள் சென்று வருவதால், பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, போலீசார் இதை கவனித்து சைலன்சர்களில் மாடிபிகேஷன் செய்துள்ள பைக்குகளை பறிமுதல் செய்ய வேண்டும். -- பெருமாள்: ரோட்டுல சிதறுது குப்பை பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டில் தனியார் கல்லுாரி அருகே உள்ள மேம்பாலத்தில் நகராட்சி வாகனத்தில் குப்பையை மூட்டை மூட்டைகளாக கட்டி, அதிகளவில் ஏற்றிச்செல்கின்றனர். இதனால், குப்பை ரோட்டில் சிதறி விழுகிறது. இதனால், பிற வாகன ஓட்டுநர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். -- தினேஷ்: ஒளிராத மின்விளக்குகள் பொள்ளாச்சி, வால்பாறை ரோட்டில் ரயில்வே மேம்பால பகுதியில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எதுவும் எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் பயணிக்க சிரமப்படுகின்றனர். மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கிருஷ்ணகுமார்: ரயில்வே அதிகாரிகள் கவனத்துக்கு உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், ரயில் வரும்போது இருப்புப் பாதையை ஆபத்தான முறையில் கடக்கின்றனர். இதனால், ரயில் மோதி விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுரேஷ்: கழிவுநீர் தேக்கம் உடுமலை மாரியம்மன் கோவில் அருகே, சாக்கடை கழிவுநீர் தேங்கி அகற்றப்படாமல் உள்ளது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சியினர் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகன்: நடைமேம்பாலம் அமைக்கணும் உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து புது பஸ் ஸ்டாண்ட்டுக்கு பொதுமக்கள் நடந்து செல்லும் போது விபத்துகளில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே இதை தடுக்கும் வகையில், நகராட்சி அதிகாரிகள் அங்கு நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - கார்த்திக்: உயரமான பாலத்தால் பாதிப்பு உடுமலை ஸ்ரீ நகர் - பழநி ரோட்டில் சந்திப்பில் நகராட்சியால், பாலம் உயரமாக கட்டப்பட்டுள்ளது. இதில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த பாலத்தை வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் சரிசெய்ய வேண்டும். - கருப்பசாமி: 'குடி' மகன்கள் தொல்லை உடுமலை பார்க் ரோடு அண்ணா பூங்கா பள்ளி சுற்றுச்சுவரை ஓட்டி 'குடி' மகன்கள் குடித்து விட்டு பாட்டில்களை வீசிச்செல்கின்றனர். இதனால், பெண்கள், குழந்தைகள் அந்த ரோட்டில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வம்: பாதாள சாக்கடை மூடி சேதம் உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் அருகே பாதாளச்சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. இதில், வாகனங்கள் செல்லும் போது பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நகராட்சியினர் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். - காளியப்பன்: ரோட்டோரத்தில் குப்பை பொள்ளாச்சி, பல்லடம் ரோடு நெகமம் பகுதியில் ரோட்டோரத்தில் அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குப்பையை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும். -- ரமேஷ்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி