உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நுாலகத்துக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

 நுாலகத்துக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

கோவை: கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், 58வது தேசிய நுாலக வாரவிழா, ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நுாலகத்தில் நேற்று துவக்கியது. இந்த விழாவை முன்னிட்டு, நுாலகத்துறை மற்றும் நியூசெஞ்சரி புத்தக நிலையம் இணைந்து நடத்தப்படும் சிறப்பு புத்தக கண்காட்சியை, மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலர் ராஜேந்திரன் துவக்கி வைத்து பேசுகையில், ''நுாலகத்துக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சனி, ஞாயிறு நாட்களில் உட்கார நாற்காலி கிடைக்காத அளவுக்கு வாசகர்கள் வருகை உள்ளது. போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் தினமும், 300 க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். நுாலக வார விழாவை முன்னிட்டு, சிறப்பு புத்தக கண்காட்சி, கருத்தரங்கு மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தனியாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார். வரலாற்று ஆய்வாளர் இளங்கோவன், எழுத்தாளர் சுடலைமணி, நியூசெஞ்சுரி புக்ஸ் மேலாளர் ரங்கராஜன், ஆர்.வி.எஸ்.,கல்லுாரி நுாலகர் வின்சென்ட், நுாலக கண்காணிப்பாளர் ஜெயகாந்தி, இரண்டாம் நிலை நுாலகர் வித்யாபோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி