உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 100க்கு போன் செய்து பொய்யான தகவல் கொடுத்தவர் கைது

100க்கு போன் செய்து பொய்யான தகவல் கொடுத்தவர் கைது

மேட்டுப்பாளையம்:அவசர உதவி எண் 100க்கு போன் செய்து காரில் வெடி மருந்து உள்ளது என பொய்யான தகவல் கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்ட போலீஸ் கட்டுப்பட்டு அறையில் இருந்து, மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அவசர உதவி எண் 100 வாயிலாக அழைப்பு ஒன்று வந்தது. அதில் கார் ஒன்றில் வெடி மருந்து உள்ளதாக ஒருவர் தகவல் கூறியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று, போலீசார் சோதனை மேற்கொண்டதில் காரில் எதுவும் இல்லை என தெரியவந்தது. பின் பொய்யான தகவல் கொடுத்தது யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேட்டுப்பாளையம் சேர்ந்த அறிவுடைநம்பி, 51, தான் பொய்யான தகவல் தந்தார் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அறிவுடை நம்பி இதே போல் ஏற்கனவே ஒருமுறை, 100க்கு போன் செய்து மேட்டுப்பாளையத்தில் தீவிரவாதிகள் உள்ளனர். தனியார் லாட்ஜ்களில் தங்கியுள்ளனர் என பொய்யான தகவல் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ