உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடியோ வெளியிட்ட ஒருவர் கைது

வீடியோ வெளியிட்ட ஒருவர் கைது

துாத்துக்குடி : கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் குறித்து 'யூடியூப்' சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட சார்லஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.துாத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே நாலுமாவடியில் மதபோதகர் மோகன் சி லாசரஸ் 'இயேசு விடுவிக்கிறார்' என்ற அமைப்பை நடத்துகிறார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இடையன்குடியை சேர்ந்த சார்லஸ், 42, என்பவர் தற்போது சென்னை நெசப்பாக்கம் பாரதிநகரில் வசிக்கிறார். அவர் தன் யூடியூப் சேனலில் மோகன் சி.லாசரஸ் குறித்து வீடியோக்களை வெளியிட்டார். புகாரின் படி, குரும்பூர் போலீசார் சார்லசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ