உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெரும் தலைவலியாக மாறிய பாதாள சாக்கடை திட்டம்

பெரும் தலைவலியாக மாறிய பாதாள சாக்கடை திட்டம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது.கவுன்சிலர்கள் பேசும் போது, 'நகராட்சி அருகேயுள்ள கட்டடம், ரோட்டோர வியாபாரிகளுக்காக கடை கட்டி முடிவு செய்து ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு தெரியாமல் எப்படி பணி மேற்கொள்ளலாம்,' என்றனர்.துணை தலைவர் கவுதமன்:மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக அவசரம், அவசரமாக ரோடு பேட்ச் ஒர்க் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தேர் திரும்பும் இடத்தில், பேவர் பிளாக் கற்களை பதித்துள்ளனர். தேர் கவிழ்வது போன்ற அசம்பாவிதம் நடந்தால் நகராட்சிக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும்.ஒப்பந்தாரர் ஒருவர், பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை; அவருக்கு தொடர்ந்து பணிகளை வழங்குவதை நிறுத்தவேண்டும்.தலைவர்: பேட்ச் ஒர்க் பணிகளுக்கு பொறியாளர் பிரிவு பொறுப்பேற்பதில்லை. மக்கள் பிரச்னை எப்படி சரி செய்ய முடியும். உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.கவுன்சிலர்கள்:பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதற்குரிய தீர்வு காணப்படாமல் உள்ளது. ஆங்காங்கே இது போன்ற பிரச்னைகளால் மக்கள் சிரமப்படுகின்றனர்.காமாட்சி நகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, போலியோ சொட்டு மருந்து முகாமின் போது, கழிவுநீர் வெளியேறியது பிரச்னையாக இருந்தது.இது குறித்து புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. மேலும், வீட்டு இணைப்புகள் முறையாக வழங்கப்படாமல் உள்ளது.அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை சந்தித்து எப்படி ஓட்டு கேட்க முடியும். பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கமிஷனர்:கவுன்சிலில் தெரிவித்த புகார்களுக்கு தீர்வு காண அறிவுறுத்தப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை