உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில ஐவர் கால்பந்து: மாணவர்கள் அபாரம்

மாநில ஐவர் கால்பந்து: மாணவர்கள் அபாரம்

கோவை;கோவை விழா, டிரீம்லைட்ஸ் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டி சரவணம்பட்டி சாக்கர் ஸ்டாப் மைதானத்தில் நடந்தது.12, 14, 16 மற்றும் 18 ஆகிய வயது பிரிவுகள் அடிப்படையில் நடந்த போட்டியில் 35க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதன் 12 வயது பிரிவு இறுதிப்போட்டியில், எஸ்.யு.எப்.சி., அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் டி.எப்.எஸ்.சி., அணியையும்; 14 வயது பிரிவில், பிரைடு எப்.சி., அணி 3 -2 என்ற கோல் கணக்கில் சிவகிரி எப்.சி., அணியையும், 16 வயது பிரிவில் ரத்தினம் ஆர்.வி.எஸ்.எஸ்., அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், பொள்ளாச்சி பி.எப்.ஏ., அணியையும், 18 வயது பிரிவில் பொள்ளாச்சி பி.எப்.ஏ., அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் கருவலுார் எப்.சி., அணியையும் வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் பதக்கம் பரிசாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை