உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடைப்பந்து அரையிறுதியில் மாணவர்கள் அசத்தல்

கூடைப்பந்து அரையிறுதியில் மாணவர்கள் அசத்தல்

கோவை;டெக்சிட்டி கூடைப்பந்து அறக்கட்டளை சார்பில் நடக்கும், மாவட்ட அளவிலான கூடைப்பந்து அரையிறுதி போட்டியில், அசத்தலாக விளையாடி இறுதிப்போட்டிக்கு மாணவர்கள் முன்னேறினர். டெக்சிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில், '17வது ஸ்ரீ தேவராஜூலு நினைவு கோப்பைக்கான' ஆண்கள் கூடைப்பந்து போட்டி மற்றும் மாணவ மாணவியருக்கான, முதலாம் ஆண்டு 'கோட் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் கோப்பை' போட்டி, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கோவை மாவட்ட கூடைப்பந்து சங்க மைதானத்தில் நடக்கிறது. மாணவர் பிரிவு முதல் அரையிறுதிப்போட்டியில், ஒய்.எம்.சி.ஏ., அணி சுகுணா பிப்ஸ் அணியையும், இரண்டாம் அரையிறுதியில் ராஜலட்சுமி மில்ஸ் அணி எஸ்.வி.ஜி.வி., அணியையும் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மாணவியர் பிரிவு முதல் அரையிறுதிப்போட்டியில், அல்வேர்னியா பள்ளி அணி பாரதி பள்ளி அணியையும், இரண்டாம் போட்டியில் ஒய்.எம்.சி.ஏ., அணி எஸ்.வி.ஜி.வி., அணியையும் வீழ்த்தின. நேற்று காலை நடந்த முதல் சுற்றுப்போட்டியில் விங்ஸ் கூடைப்பந்து கிளப் அணியையும், மேற்கு மண்டல கூடைப்பந்து அணி ஸ்பார்டன்ஸ் அணியையும் வீழ்த்தி, இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ