உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அன்னுார்:'டிஜிட்டல் கிராப் சர்வே' பணியை கண்டித்து, அன்னுாரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், அன்னுார் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு புதிதாக துவக்கி உள்ள 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணியால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்த பயனும் இல்லை. இது நேரத்தை வீணாக்கும் பணி. இந்த பணியால் குழப்பம் ஏற்படும். இதை செயல்படுத்த இயலாது. எனவே அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத பணியை கட்டாயமாக செய்ய வற்புறுத்தும் தமிழக அரசின் போக்கை கண்டிக்கிறோம், என கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் முன்னேற்ற சங்கத்தின் வட்டத் தலைவர் விஜயன், செயலாளர் செந்தில், அலுவலர்கள் சங்கத்தின் வட்டச் செயலாளர் அரவிந்த் பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ