மேலும் செய்திகள்
சக்தி மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது
25-Apr-2025
கோவில்பாளையம் : கோவில்பாளையத்தின் காவல் தெய்வமான, ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 30ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டு, பூவோடு வைக்கப்பட்டது.6ம் தேதி வரை தினமும் இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதலும் சிறப்பு வழிபாடும் நடந்தது. நேற்று அம்மன் அழைத்து வருதலும் கரகம் எடுத்து வருதலும் நடந்தது. சக்தி மாரியம்மனுக்கு, அபிஷேக பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்தலும், மதியம் பூவோடு எடுத்தலும் நடக்கிறது. மாலையில் அக்னி கரகத்துடன் அலகு குத்தி பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக தேர் இழுத்து வருகின்றனர். நாளை காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு மகா சிறப்பு அபிஷேகமும், மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
25-Apr-2025