உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மிக மோசமான சாலை: கிராம மக்கள் தவிப்பு

மிக மோசமான சாலை: கிராம மக்கள் தவிப்பு

அன்னுார்:மிக மோசமான சாலையால் மூன்று கிராம மக்கள் தவிக்கின்றனர்.ஒட்டர்பாளையம் ஊராட்சியில், அன்னுார் -மேட்டுப்பாளையம் சாலையில் துவங்கி, ஒட்டர்பாளையம் வரையும், அங்கிருந்து ஆயி கவுண்டன் புதுார் வரையும், சாலை மிக மோசமான நிலையில் உள்ளது.பல இடங்களில் குழிகள் ஏற்பட்டு, தார் கரைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். பள்ளி வாகனங்கள், தோட்டங்களில் இருந்து விளைபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றன.இந்த சாலையை சீரமைக்க கோரியும், ஆயிமாபுதுாரில் பொதுக்கழிப்பிடம் அமைக்க கோரியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ஊராட்சி நிர்வாகத்திடமும், கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ஒட்டர்பாளையம், ஆயிக்கவுண்டன்புதுார் பகுதியில் 250 வீடுகளில் மனுவில் கையெழுத்து பெறும் இயக்கம் நடந்தது. 250 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது.கையெழுத்து இயக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் அஜித், நிர்வாகிகள் ராஜேஷ், இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி