உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கறவை மாடுகள் வாங்க வரும், 20ல் லோன்மேளா

கறவை மாடுகள் வாங்க வரும், 20ல் லோன்மேளா

வால்பாறை,: கறவை மாடுகள் வாங்கி பயன்பெறும் வகையில், வால்பாறையில் வரும் 20ம் தேதி லோன்மேளா நடக்கிறது.வால்பாறையில் தேயிலை அல்லாத மாற்றுத்தொழில் ஏற்படுத்தும் வகையில், கடந்த வாரம் கோவை பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் கோவை ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இணைந்து, வால்பாறை நகரில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் துவங்கியது.இந்நிலையில், வால்பாறை பால் உற்பத்தியாளர் நல சங்க செயலாளர் பொன்காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:வால்பாறையில், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும், 20ம் தேதி நடக்கிறது. இந்த முகாமில் கறவை மாடுகள் வாங்குவதற்கான லோன்மேளா நடக்கிறது. முகாமில் கலந்து கொள்ள வரும் பயனாளிகள், தங்களது இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார்டு கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை