| ADDED : ஜன 18, 2024 12:07 AM
கோவை, : மாவட்ட அளவிலான மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'என். தாமோதரன் வெல்பேர் டிராபிக்கான' மூன்றாம் டிவிஷன் லீக் போட்டி, கோவைப்புதுார் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், ஆறுமுகம் கிரிக்கெட் கிளப் மற்றும் ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ஜாலி ரோவர்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.அணியின் கேப்டன் காட்வின் ரூபேஷ் (91), நரேன் கார்த்திகேயன் (60), சுஜித் (60) பிரியதர்ஷன் (33) ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெற்றிக்கு 290 ரன்கள் தேவை என்ற, கடின இலக்குடன் களமிறங்கிய ஆறுமுகம் அணிக்கு கதிரவன் (35) சுமாரான துவக்கம் அளித்தார்.பின்னர், சூர்யா (38) விஜய் பாரதி (47) ஆகியோர் அணிக்காக ரன் சேர்த்தனர். மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை.இதனால் அந்த அணி 44.3 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜாலி ரோவர்ஸ் அணியின் திருமுருகன், நான்கு விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.