உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சிம்மாசனம் என பெயர் வந்தது இப்படித்தான்!

 சிம்மாசனம் என பெயர் வந்தது இப்படித்தான்!

கோவை: கோவை திருப்பாவை சங்கம் மற்றும் கோதண்டராமர் கோயில் தேவஸ்தானம் சார்பில், 67ம் ஆண்டு மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி, ராமர் கோயில் அரங்கில் நடந்தது. இதில் ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் பேசியதாவது: ஆண்டாள், கண்ணனை சிம்மாசனத்தில் வந்து அமரும்படி அழைக்கிறாள். பகவான் எப்படி வந்து அமரவேண்டும் என்று ஆண்டாள் விரும்புகிறாள் என்றால், சிங்கம் இருபுறமும் பார்த்துக் கொண்டு நடந்து வரு வது போல், புலி பாய்ந்து செல்வது போல், யானை அடி அசைந்து வருவது போல், பாம்பு வளைந்து வளைந்து செல்வது போல், நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, ஆசீர்வதிக்க வேண்டும் என, பாசுரம் பாடி அழைக்கிறாள். சிம்மாசனத்தில் கிருஷ்ண பகவான் அமர்ந்த பிறகு, அதற்கு பேரழகு வந்து விடுகிறது. அரசர்கள் அமரும் ஆசனத்துக்கு எப்படி சிம்மாசனம் என்று பெயர் எப்படி வந்தது தெரியுமா? பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்து, இரணியனை வதம் செய்த அடுத்த கணமே, இரணியன் அமர்ந்து ஆட்சி செய்த அந்த ஆசனத்தில், நரசிம்மர் போய் அமர்ந்து கொண்டார். அரக்க குலத்தை சேர்ந்த இரணியன் அமர்ந்து இருந்த ஆசனம், நரசிம்மர் அமர்ந்த அடுத்த நொடியே புனிதமடைந்து விடுகிறது. அரசன் அமரும் ஆசனத்தில் சிங்க அவதாரத்தில் நரசிம்மர் அமர்ந்ததால், அன்றிலிருந்து அது சிம்மாசனம் என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை