மேலும் செய்திகள்
கஞ்சா கடத்திய மூவர் கைது
11-Aug-2025
கோவை; சிறை அருகில், ஒரு கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிங்காநல்லுார் போலீசார், ஒண்டிப்புதுார் திறந்தவெளி சிறை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸ் வாகனம் வருவதை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற, மூவரையும் மடக்கி பிடித்து சோதனையிட்ட போது, ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, சவுரிபாளையம், எம்.ஜி.ஆர்., வீதியை சேர்ந்த முரளிதரன்,24, உப்பிலிபாளையம் குளத்தேரி மெயின் ரோட்டை சேர்ந்த தினேஷ்பாபு,23, வரதராஜபுரத்தை சேர்ந்த கோகுல்,22, ஆகியோரை கைது செய்தனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர் .
11-Aug-2025