மேலும் செய்திகள்
வீட்டில் பதுக்கிய கஞ்சா கோழி வியாபாரி கைது
25-Sep-2025
போத்தனுார்; செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. இளவேந்தனுக்கு, நேற்று முன்தினம் ஒத்தக்கால்மண்டபம், தனியார் மருத்துவமனை சாலை சந்திப்பில், கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசாருடன் அங்கு சென்ற அவர், சந்தேகத்தின் பேரில் மூவரிடம் விசாரித்தார். அவர்கள் காருண்யம் ராஜதுரை, 24, காஞ்சிபுரம், மேலகோட்டையூரை சேர்ந்த ராஜேந்திரன், 23 மற்றும் சென்னை சிட்லபாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியை சேர்ந்த கோகுல், 24 என தெரிந்தது விற்பனைக்காக 1.3 கிலோ கஞ்சா, போதை பயன்பாட்டுக்கான டெபன்டடால் மாத்திரைகள், 41 வைத்திருந்தனர். அவற்றறுடன் ஸ்கூட்டர் ஒன்றையும் பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர்.
25-Sep-2025