உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

மருதமலை கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது.முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் தைப்பூச தேர்த்திருவிழா துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதியுலா நடந்து வருகிறது.இந்நிலையில், தைப்பூச தேர்த்திருவிழாவின் ஆறாம் நாளான இன்று, காலை, யாகசாலை பூஜையும், திருவீதி உலாவும் நடக்கிறது, தொடர்ந்து, காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.நாளை, தைப்பூசத்தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. இதனையொட்டி, இன்று மாலை முதலே, ஏராளமான பக்தர்கள், பால்குடம், காவடி எடுத்து பாதயாத்திரையாக வருவார்கள் என்பதால், தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள், படிக்கட்டு பாதை வழியாக இன்று இரவு முழுவதும் நடந்து செல்வார்கள் என்பதால், பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை